Untitled Document
Home| Trust Services | சித்தர் சிவந்திலிங்கசுவாமிகள் செய்த அற்புதங்கள் | உயிரோசை இதழில் | Video | Enquiry | Photos | Contact Us

சித்தர் பரகாயப் பிரவேசம்

கருவூரார் வாதகாவியம் 700 - 623 - 632 பாடல்கள்
தெரிந்துதான் கூடுவிட்டுச் சிறப்புடன் மறுகூடேகித்
தெரிந்துதான் வருவார் பின்னுந்தெரியாம லேகமாட்டார்.
தெரிந்திதைச் செய்யாவிட்டால் தேகமுஞ் சித்தியேது
தெரிந்துதான் மறுகூடேகித் திரிந்துமே வருகுவாரே.


சாதி வகை இல்லையெனல்

வருவதும் போவதுமாயிருந்தால்
வகுத்துரைக்கச் சாதிவகை முடியுமோதான்
அறிவுவர உலகோர்க்காய் ஜாதி சொன்னேன்.
அல்லாரும் ஒரு ஜாதியல்லால் வேறோ.

பிரியமுடன் பரகாயப் பிரவேசந்தான்
பெரியோரும் சித்தர் களும் செய்துகொள்வார்.
உரியபடி கூடுவிட்டுக் கூடுபாய்தல் உலகத்தில் சித்தருக்கு
வழக்கமாமே
வழக்கத்தைச் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு.
வகையுள்ள முனிவர் சித்தர் மாறிமாறிப்
பழக்கமுள்ள கூடுவிட்டுக் கூடு பாய்வார்
பாய்ந்தவருங் காலமட்டுமிருந்து வாழ்வார்.
முழக்கமுடன் பின்புவந்து தன் சரீரம்
நுழைந்து கொள்வார் தன் சரீரம் தப்பிப் போனால்
இனக்கமுள்ள கற்பமது சாப்பிட்டேதான்
இனிமையுடன் சடலமதைப் பெலஞ்செய்வாரே

பெலஞ்செய்வாரதை விட்டு மறுகூடேகிப்
பின்புமொரு கூடதனிற் பாய்ந்து வாழ்வார்.
நலமுடனே அவர்கள் செய்யும் தொழிலையேதான்
நானெடுத்துச் சொல்லவென்றால் நாவோயில்லை.
பலமுடனே பரகாயஞ் செய்யும்போது
பார்த்தக்கால் வெகுசுருக்கு அதீதமெத்த
தவமுடனே தன்சரீர மொளித்து வைக்கத்
தான் செய்து வைக்குங் குகையைப் பாரே.

பாரப்பா கிரேதாயில் ரொம்ப ஆட்டம்
பண்பாக ஆடினார் சித்தரெல்லாம்
வேரப்பா திரேதாயில் அட்டசித்தும்
வேடிக்கை வினோதங்கல் செய்து வைத்தார்
சீரப்பா துவாபரையில் அனேக சித்தி
செய்தவர்கள் நல்லதொரு பேரும் பெற்றார்
காரப்பா கலியுகந்தான் போகுமட்டும்
கண்மூடிச் சிவயோகம் கண்டார் பாரே.

இல்லறப் பெருமை கூறல்

பிறக்கவே அரிதுகண்டாய் பிறந்திடிற் கற்பங் கொள்வாய்
இறக்கவுமாகாதப்பா இருந்திடு யில்லத்தோடே
இல்லமே குணமாஞ் சொன்னேனில்லவளிணக்கமானால் இருந்திரு இல்லத்தோடே
அல்லது இல்லாவிட்டால் அடவுடனில்லம் வேண்டாம்.
இல்லத்தாலும் பாதமே பணிந்து சொன்ன பணிவிடை செய்து
நீதியாய் பாதபூஜை நித்தமுஞ் செய்வாளாகில் கொண்டு
வாதியாயிருக்கலாகும் மானிலன் தன்னிலன்றே
மானிலமங்கையாசை வைத்திடில் மலையிலென்ன
வானிலமில்லத்தாளை மருவினாலங் கென்ளாகும்.
தானதர்மங்கள் செய்து சம்புசிற்பரையை நன்றாய்
ஏனமாய் தியானஞ் செய்தாலிருக்கலாமெங்குந் தானே

எங்குமே யிருக்கலாங்காண் யில்லதின் வாழ்க்கையாகச்
சங்கையாய்ப் பத்தி முத்தி வைராக்கியந் தப்பானாகில்
கொங்கணர் போகநாதர் போலவே கூடி வாழ்ந்து
மங்கையரோடு மேருவரையினிற் செல்லலாமே.

சிவன், விஷ்ணு, பிரம்மா சரீரம் கொடுத்தல் மூவரும் தனதுபத்தினிமார்களுக்கு சரீரத்தில் இடம் கொடுத்துள்ளார்கள்

மாய்ந்திடாது இவ்விதமாய்ப் பதினெண் பேர்கள்
மனைவி மக்களுடன் வாழ்க்கை பேரன்பேத்தி
தோய்ந்திடவே இருந்தேற்றுக் காலந்தானும்
தொடர்ந்திடாது நீடுழிக் காலம் பெற்றோம்.

கலியன் வந்துற்றான் என்று ககன் ரிஷிகளும் கையிலையில்
குகை அமைத்து சமாதி கொண்டார். கலியுகத்தில் அதர்
மத்தான் மெத்த நடக்குமென்று கலியுகந்தான்
எப்படியும் போகட்டும் என்று

-கருவூரர்
சித்தர்களின் அரிய தகவல்கள்
  பதினெண் சித்தர்கள் துதி
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்களின் குலதெய்வம்
(வாலை-வாராஹி)
- - - - - - - - - - - - - - - - - -
  அகஸ்தியர் அருள்வாக்கு
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச் சித்தரின் "சந்திரரேகை"
உலக மாற்றம்
- - - - - - - - - - - - - - - - - -
  கலியுதிப்பில்
(ஆண்ட மன்னர்கள் - இனி ஆளப்போவது)
- - - - - - - - - - - - - - - - - -
  வீர பிரமேந்திர சுவாமிகளின்   
காலக்ஞானம (கலிநடப்பு, முடிவு)
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் வல்லபம்
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டுப் கூடுபாய்தல்
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச்சித்தர், கருவூர்ச்சித்தர் கூறும்
இல்லறப் பெருமை

பிற தகவல்கள்
  ஏன் யுகமுடிவும் உலகமாற்றமும்
- - - - - - - - - - - - - - - - - -
  கண்ணனும் வாலை சக்தியும் உரையாடியது
- - - - - - - - - - - - - - - - - -
  கல்கி கண்ணனின் புதிய கீதை
- - - - - - - - - - - - - - - - - -
  கல்பம் பெற தகுதியுடையவா்
- - - - - - - - - - - - - - - - - -
  கல்பம் பெற தகுதியற்றவா்கள்
- - - - - - - - - - - - - - - - - -
  காயகற்பம் பற்றி சித்தா்களின் கூற்று
- - - - - - - - - - - - - - - - - -
  குருவிடம் சீடா் செல்லும் முறை
- - - - - - - - - - - - - - - - - -
  புதுயுகத்தின் சிறப்புகள்
- - - - - - - - - - - - - - - - - -
  போகா் ஜனன சாகரம்
- - - - - - - - - - - - - - - - - -
  மக்களாட்சி தத்துவம்
- - - - - - - - - - - - - - - - - -
  யார் யார் நரகப் பசிக்கு உடையவா்கள்
- - - - - - - - - - - - - - - - - -
  கடவுள் நீதி வழங்க வருகிறார் - திருவிவிலியம்
- - - - - - - - - - - - - - - - - -
  தா்மம் காப்பதே தலையாய கடமை - நடிகர் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதம்
- - - - - - - - - - - - - - - - - -
  மறுமைநாள் - இறுதித் தீா்ப்பு பற்றி - திருக்குரான்
- - - - - - - - - - - - - - - - - -
  மக்களாட்சியின் தா்மம் எங்கே ? - பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்
- - - - - - - - - - - - - - - - - -
  கடவுள் படைத்த பூமி யாருக்கு சொந்தம் - ஐநா சபைக்கு அனுப்பியுள்ள கடிதம்
- - - - - - - - - - - - - - - - - -
  சிவனிடம் கலி பெற்ற வரங்கள்
- - - - - - - - - - - - - - - - - -
  தர்ம சேனையின் கடமைகள்
- - - - - - - - - - - - - - - - - -
  வைகுண்டர் பிறக்க அடையாளம்
- - - - - - - - - - - - - - - - - -
  சன்மார்க்க பெரும்பதி வருகை
- - - - - - - - - - - - - - - - - -
  வகுப்புவாதத்தை வேரறுப்போம்
         Copyright @ 2010 Siddhar ulagam, Ponnamaravathi www.go4property.com